'மதுவை ஒரு சமூகம் தள்ளிவைக்க வேண்டும் என்பது அறிவுலகத்தின் வேண்டுகோள்' - கவிஞர் வைரமுத்து

மதுவை அருந்துவது குறித்து அறிவு பெறும் வரை அதனை தள்ளித்தான் வைக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-27 16:41 GMT

சென்னை,

கல்வி கற்ற சமூகத்தில் மதுவை மனிதன் அருந்துகிறான் என்றும், கல்வி குறைந்த சமூகத்தில் மது மனிதனை அருந்துகிறது என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கல்வி மேம்பட்ட சமூகத்தில் மது துய்க்கப்படுவதற்கும், கல்வி குறைந்த சமூகத்தில் மது துய்க்கப்படுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. மேல்நாடுகளில், கல்வி கற்ற மூத்த சமூகத்தில் மதுவை மனிதன் அருந்துகிறான். கல்வி குறைந்த சமூகத்தில் மது மனிதனை அருந்துகிறது.

நம்முடைய சமூகத்தில் எல்லா மக்களும் கல்வி கற்கும் வரை, மதுவை அருந்துவது குறித்து அறிவு பெறுகிற வரை மதுவை ஒரு சமூகம் தள்ளித்தான் வைக்க வேண்டும் என்பது அறிவுலகத்தின் வேண்டுகோள்.

காலப்போக்கில் இந்த கருத்து அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், சமூகம் இந்த கருத்துக்கு உடன்படும் என்றும் நான் நம்புகிறேன். அதுவரை மதுவை ஒரு ஆர்வமுள்ள சமூகம், அறிவார்ந்த சமூகம், பண்பாட்டை காக்க நினைக்கும் சமூகம் எதிர்த்துக் கொண்டுதான் வரும்."

இவ்வாறு வைரமுத்து தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்