எதிர்க்கட்சிகளின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி: பிரதமர் மோடி விமர்சனம்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

Update: 2019-04-27 08:11 GMT
கன்னோஜ்,

உத்தரப்பிரதேசத்தில் உள்ள  கன்னோஜ் பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி பேசியதாவது:- உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை சேர்ந்து அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. 

இந்த சந்தர்ப்பவாதிகள் அனைவரும் சேர்ந்து எதற்கும் உதவாத அரசைத்தான்  அமைக்க  விரும்புகிறார்கள். இவர்களின் மந்திரம் முழுவதுமே சாதியைப் பற்றிப்பேசி, சாமானிய மக்களிடம் கொள்ளையடிப்பதுதான்.

உண்மையில் சந்தர்ப்பவாதிகள் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி மிகப்பெரிய ஊழல் கூட்டணி. இவர்களின் நோக்கமே மக்களுக்கு பயன்தராத அரசை உருவாக்குவதுதான்.  

எவ்வளவுதான் எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்தாலும் அவர்களால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது.   எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள ஊழல் கூட்டணியால் தங்களின் வாரிசுகளின் நலன்கள் குறித்துதான் சிந்திக்க முடியுமே தவிர தேசத்தின் நலன் குறித்து சிந்திக்க முடியாது. பலாகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் இவர்கள், பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்” என்றார். 

மேலும் செய்திகள்