பிரதமர் மோடி மீதான வழக்கு: தேர்தல் கமி‌ஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்துவருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக்கோரியும் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2019-05-01 00:00 GMT

புதுடெல்லி,

மோடி மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் கமி‌ஷனில் 10–க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமி‌ஷன் தரப்பில் வக்கீல் யாரும் ஆஜராகவில்லை. எனவே, தேர்தல் கமி‌ஷன் கருத்தை கேட்காமல் இந்த வழக்கை உடனடியாக எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் 6–ந்தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்

பின்னர் வழக்கை 6–ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மோடி மற்றும் அமித்ஷா மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க தடை எதுவும் இல்லை என்றும் தங்கள் உத்தரவில் கூறினர்.

மேலும் செய்திகள்