திருப்பதி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி,
திருப்பதி - ராமேசுவரம் (வண்டி எண்: 16779/16780) எக்ஸ்பிரல் ரெயிலில் தற்காலிகமாக பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமேசுவரத்தில் இருந்து வருகிற 2-ந் தேதி முதல் மார்ச் 29-ந்தேதி (வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில்) வரையிலும், திருப்பதியில் இருந்து ஜனவரி 3-ந்தேதி முதல் மார்ச் 30-ந்தேதி (திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில்) வரையிலும் கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்படும்.
இந்த ரெயிலில் 3 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள். மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக 1 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1 லக்கேஜ் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும். இந்த தகவலை திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.