நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்களில் 394 பேர் பட்டதாரிகள்

நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்களில் 394 பேர் பட்டதாரிகள் என தெரியவந்துள்ளது.

Update: 2019-05-24 20:00 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் அதில் வெற்றி பெற்ற எம்.பி.க்களின் கல்வித்தகுதி குறித்த விவரங்களை ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டு உள்ளது. அதன்படி புதிய உறுப்பினர்களில் 394 பேர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் 43 சதவீதம் பேர் பட்டதாரிகள் எனவும், 25 சதவீதத்தினர் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் எனவும், 4 சதவீதத்தினர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதைப்போல தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவர்களில் 27 சதவீதத்தினர் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 20 சதவீதத்தினர் மட்டுமே 12-ம் வகுப்பை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்