குஜராத் தீ விபத்து : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது - மேலும் 7 பேர் கவலைக்கிடம்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் ‘தக்ஷீலா காம்ப்ளக்ஸ்’ என்ற 4 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2019-05-25 23:17 GMT

சூரத், 

தக்ஷீலா காம்ப்ளக்சில் பயிற்சி வகுப்பில் இருந்த 20 மாணவ–மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த 3 பேர் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தனர். 

இதனால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த கட்டிடத்தில் தீ தடுப்பு விதிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இத்தகைய கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற கட்டிடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறதா? என்று மாநிலம் முழுவதும் கண்காணிக்குமாறு போலீசாருக்கு முதல்–மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் நடந்த 40 ஆபத்தான கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்