அவதூறு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்

அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்.

Update: 2019-07-16 06:06 GMT
புதுடெல்லி,

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை பா.ஜனதா நீக்கியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது பா.ஜனதாவை சேர்ந்த  விஜேந்தர் குப்தா என்பவர்  டெல்லி கோர்ட்டில் அவதூறு வழக்கு  தொடர்ந்தார்.  

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கும்படி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா  ஆகியோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால்  மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர்  கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். மனுவை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் தலா ரூ 10 ஆயிரத்திற்கு   ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். அடுத்த விசாரணை  ஜூலை 25 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்