மாயாவதி ஆட்சிக்கால ஊழல்; 39 அதிகாரிகளுக்கு சிக்கல் - வழக்கு தொடர உ.பி. அரசு அனுமதி

மாயாவதி ஆட்சிக்கால ஊழலில் தொடர்புடைய 39 அதிகாரிகள் மீது வழக்கு தொடர உ.பி. அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2019-07-16 20:00 GMT
லக்னோ,

கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல்-மந்திரியாக இருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில், லக்னோ, நொய்டா ஆகிய நகரங்களில், பட்டியல் இன தலைவர்களுக்கு நினைவு மண்டபங்கள் கட்டப்பட்டன. இதில், ரூ.1,410 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு நடந்த அகிலேஷ் யாதவ் ஆட்சிக்காலத்தில், இந்த ஊழல் குறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. ஊழலில் 39 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு தொடர தற்போதைய யோகி ஆதித்யநாத் அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரி இருந்தது.

2 வருட தாமதத்துக்கு பிறகு, 39 பேர் மீதும் வழக்கு தொடருவதற்கான அனுமதியை உத்தரபிரதேச அரசு அளித்துள்ளது. இதையடுத்து, கோர்ட்டில் 39 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. இவர்களில் 2 அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டனர்.

மேலும் செய்திகள்