மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசின் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர்.

Update: 2019-07-24 12:33 GMT
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு  பெரும்பலத்துடன் காங்கிரஸ் இல்லை. பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உதவியுடனே ஆட்சி நடக்கிறது. இன்னும் 24 மணி நேரங்களில் கூட எங்களால் ஆட்சியை கலைக்க முடியும் என பா.ஜனதா தலைவர் கூறினார். இதற்கிடையே அம்மாநில சட்டசபையில் கிரிமினல் சட்ட (திருத்தம்) மசோதா தாக்கல்  செய்யப்பட்டது. இதில் அரசின் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக இரு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கமல்நாத் பேசுகையில், ஒவ்வொருநாளும் நாங்கள் ஒரு மைனார்ட்டி அரசு என பா.ஜனதா கூறிவருகிறது. எப்போது வேண்டுமென்றாலும் காங்கிரஸ் அரசு கவிழும் எனக் கூறுகிறது. ஆனால் இன்று சட்டசபையில் கிரிமினல் சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்