உன்னாவ் இளம்பெண் கார் விபத்து - எம்.எல்.ஏ. வீட்டில் சி.பி.ஐ. சோதனை

உன்னாவ் இளம்பெண் மீது கார் விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக, எம்.எல்.ஏ. வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.

Update: 2019-08-04 21:45 GMT
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2017-ம் ஆண்டு, பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரால் கற்பழிக்கப்பட்டார். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் இருக்கிறார். இதற்கிடையே, கடந்த 30-ந் தேதி, அந்த இளம்பெண் சென்ற கார் மீது ஒரு சரக்கு லாரி மோதியது. இதில், அந்த பெண்ணும், அவருடைய வக்கீலும் படுகாயம் அடைந்தனர். 2 உறவுக்கார பெண்கள் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக செங்கார் எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் மீது சி.பி.ஐ. கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், செங்கார் எம்.எல்.ஏ. உள்பட குற்றம் சாட்டப்பட்டோரின் வீடுகளில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது. உத்தரபிரதேசத்தின் லக்னோ, பண்டா, உன்னாவ், பதேபூர் ஆகிய 4 மாவட்டங்களில் 17 இடங்களில் சோதனை நடந்தது.

மேலும் செய்திகள்