ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவர் இல்லாததால் திரும்பினர்

ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.

Update: 2019-08-20 13:41 GMT
புதுடெல்லி,

கடந்த 2007-ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த வழக்கில்  கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால், சிதம்பரம் வீட்டில் இல்லாததால், சிபிஐ அதிகாரிகள் திரும்பிச்சென்றனர். 

மேலும் செய்திகள்