ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2019-08-22 13:15 GMT
 புதுடெல்லி,

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.  டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை இன்று ஆஜர்படுத்தினர். அவர் குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டு  விசாரிக்கப்பட்டார்.

 ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி, விவேக் தன்கா ஆகியோர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக வாதாடினர். சிபிஐ தரப்பில் துஷர் மேத்தா  ஆஜராகி வாதாடினார். சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்துக்கு 5 நாள் காவல் கோரி  சி.பி.ஐ மனு தாக்கல் செய்து உள்ளது.

இதற்கு, ப சிதம்பரம் தரப்பு வாதிடும் போது,  விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கேட்ட கேள்விகளையே கேட்டு இருக்கிறார்கள். அதனால் தான் அவர் அமைதியாக இருந்தார். விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டதால், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். 

இதன்படி, சிறித்து நேரத்தில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 4 நாள்கள் காவலில் எடுத்து நீதிமன்றம் அனுமதி வ்ழங்கியுள்ளது. காவல் முடிந்தவுடன் வரும் திங்கள் கிழமை சிதம்பரத்தை ஆஜர்படுத்த நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ காவலில் இருக்கும் போது தினமும் 30 நிமிடங்கள்  குடும்பத்தினரை சந்திக்க ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்