அருண் ஜெட்லியின் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அஞ்சலி

அருண் ஜெட்லியின் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-08-24 13:07 GMT
டெல்லி,

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 66-வயதான அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

எய்ம்ஸ் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அருண் ஜெட்லியின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

அருண் ஜெட்லியின் உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்   அருண் ஜெட்லியின் உடலுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்