100 நாள் வேலை திட்ட நிதி வழங்குவதில் தாமதம்; மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள் வேலை) திட்டம் தொடர்பாக மத்திய அரசு மீது மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.

Update: 2019-09-05 23:23 GMT
கொல்கத்தா, 

 மாநில சட்ட மன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு இது தொடர்பாக பதிலளிக்கும்போது அவர் கூறுகையில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளை மத்திய அரசு குறைக்கிறது. இந்த திட்டத்துக்கான நிதியை வழங்க குறைந்தபட்சம் 3 மாதங்களாவது தாமதப்படுத்துகிறது. பலநேரங்களில் இது 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகிறது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது’ என்றார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணிகளில் மேற்கு வங்காளம் முதல் இடத்தில் இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, மாநில நீர்பாசனத்துறை, பஞ்சாயத்துகள் மற்றும் மீன்வளத்துறையின் உதவியால் 3 லட்சம் நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்