புதிய மோட்டார் வாகன சட்டம் ஜார்கண்டில் 3 மாதம் தள்ளிவைப்பு

புதிய மோட்டார் வாகன சட்டம், ஜார்கண்டில் 3 மாதம் தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2019-09-15 21:30 GMT
ராஞ்சி,

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1-ந்தேதி முதல் பல மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வகை செய்யும் இந்த சட்டத்துக்கு பொதுமக்களிடம் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.

எனவே சில மாநிலங்கள் அபராதத்தை குறைத்து நடவடிக்கை எடுத்து உள்ளன. மேலும் சில மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைத்து இருக்கின்றன. அந்தவகையில் ஜார்கண்ட் மாநிலமும் 3 மாதங்கள், அதாவது டிசம்பர் வரை இந்த சட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைத்து உள்ளது.

அதற்கு முன் வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் பெறுவதற்கு வசதியாக சிறப்பு மையங்களை திறக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளை முதல்-மந்திரி ரகுபர்தாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார். மேலும் புதிய சட்டம் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தினார். இதைப்போல போக்குவரத்து விதிகளை மதிக்குமாறு பொதுமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்