சர்வதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் -அஜித் தோவல்

சர்வதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று அஜித் தோவல் தெரிவித்தார்.

Update: 2019-10-14 06:51 GMT
புதுடெல்லி, 

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பான எப்.ஏ.டி.எப்-பிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு  வருகிறது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைமை அதிகாரிகள் கலந்து கொண்ட  கூட்டத்தில் பேசிய அஜித் தோவல் இந்த தகவலை குறிப்பிட்டார்.

அஜித் தோவல் மேலும் கூறும்போது, “ எப்.ஏ.டி.எப். போன்ற அமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தங்கள் நாட்டின் கொள்கையாக பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைபிடித்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்பது நமக்கு நன்கு தெரியும். எனினும், சர்வதேச அளவில் இதை நிரூபிக்க நமக்கு போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது” என்றார்.

மேலும் செய்திகள்