கர்நாடகாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

கர்நாடகாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-10-23 14:18 GMT
பெங்களூரு,

தென்மேற்கு பருவ மழை கர்நாடகாவில் வெளுத்து வாங்கியது. கனமழையால் கர்நாடகாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடும் சேதங்கள் ஏற்பட்டன.  லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உறவுகள், உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், வட கர்நாடகத்தை மழை மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளது. 

வடகர்நாடகத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி வருகிறது. 

இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கர்நாடகத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்