பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு, இயல்பு வாழ்க்கை முடக்கம்

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-30 07:25 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த ஐந்து தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  பாதுகாப்பு படையினர் நகரின் முக்கிய வீதிகள், மற்றும் இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில், காஷ்மீரைச் சாராதவர்களை தாக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், இதை முறியடிக்க பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு பிறகு 87 நாட்களாகியும், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. காஷ்மீரில் சில இடங்களில் நேற்று மோதல் வெடித்ததால், வழக்கமாக திறக்கும் நடைபாதை கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால், சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்பட்டன.  எனினும்,  அங்குள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டுத்தேர்வு திட்டமிட்டபடி துவங்கியுள்ளது. 

மேலும் செய்திகள்