டி.கே. சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி

டி.கே. சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2019-11-15 07:11 GMT
புதுடெல்லி,

கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.   

ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் அக்.23 ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  டி.கே. சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மேலும் செய்திகள்