புதிய தலைமை கணக்கு அதிகாரியாக சோமா ராய் பர்மன் பொறுப்பேற்பு

புதிய தலைமை கணக்கு அதிகாரியாக சோமா ராய் பர்மன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2019-12-01 22:12 GMT
புதுடெல்லி,

நாட்டின் புதிய தலைமை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரியாக (சி.ஜி.ஏ.) சோமா ராய் பர்மன் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் டெல்லியில் நேற்று தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

1986-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த இந்திய சிவில் கணக்குப்பணிகள் துறை (ஐ.சி.ஏ.எஸ்.) அதிகாரியான சோமா ராய் பர்மன், நாட்டின் 24-வது தலைமை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி ஆவார். மேலும் 7-வது பெண் அதிகாரி என்ற பெருமையும் பெறுகிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் கணக்கு புள்ளியியலில் எம்.பில் பட்டம் பெற்றுள்ள சோமா ராய், கடந்த 33 ஆண்டுகளாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் பணிபுரிந்துள்ளார். இதில் நிதி, உள்துறை, தகவல் ஒளிபரப்பு, கப்பல், நெடுஞ்சாலைத்துறை என முக்கிய துறைகளும் அடங்கும்.

இதைப்போல தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அலுவலகத்தில் இயக்குனராகவும் சோமா ராய் பதவி வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்