திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2019-12-12 19:05 GMT
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த  மசோதாவிற்கு ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகின.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை திருத்த சட்ட மசோதா வழி வகை செய்கிறது. 

இதனிடையே இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

மேலும் செய்திகள்