நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை; மத்திய அரசு

நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-12-13 08:09 GMT
புதுடெல்லி,

நீட் தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரிக்கு விலக்களிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். திமுக எம்.பி. டி.ஆர். பாலு  உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியிருப்பதாவது: 

"இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை.  நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதால், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும்” என்றார். 

மேலும் செய்திகள்