மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 7 வங்கதேசத்தினர் கைது

மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 7 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-13 19:39 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் திருப்பதி நகர் பகுதியில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக வசித்து வருவதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு சந்தேகத்துக்கு இடமாக தங்கி இருந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், வங்கதேசத்தை சேர்ந்த அவர்கள் எந்தவொரு ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக மராட்டியத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை அர்னாலா போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்