ஜே.என்.யூ. துணைவேந்தர் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் - ப.சிதம்பரம்

ஜே.என்.யூ. துணைவேந்தர் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-01-08 14:17 GMT
புதுடெல்லி,

ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் நடந்தவற்றை கடந்து, காலத்தை கடந்து முன்னேறி வருமாறு மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். முதலில் அவர் தனது அறிவுரையை பின்பற்ற வேண்டும். அவரும் தற்போது கடந்த காலம் தான். அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்