இந்தியாவுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லை: ஓய்வுபெற்ற 100 அதிகாரிகள் கடிதம்

இந்தியாவுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்லை என ஓய்வுபெற்ற 100 அதிகாரிகள் மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Update: 2020-01-10 21:09 GMT
புதுடெல்லி,

டெல்லி முன்னாள் கவர்னர் நஜீப்ஜங், ஓய்வுபெற்ற அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர், முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜஹத் ஹபிபுல்லா உள்பட 100 ஓய்வுபெற்ற அதிகாரிகள் மக்களுக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், “குடியுரிமை சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று மத்திய அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு கணக்கெடுப்பது தேவையில்லாத, வீணான வேலை. இந்த இரண்டையும் அமல்படுத்த மாட்டோம் என்று பெரும்பான்மையான மாநில அரசுகள் கூறியிருப்பது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்