அகமதாபாத் வந்தடைந்தார் டொனால்டு டிரம்ப்; பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்பு

2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!

Update: 2020-02-24 06:36 GMT
படங்கள்: ANI
அகமதாபாத்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் அகமதாபாத்திற்கு வருகை தந்துள்ளார்.  இரு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் டிரம்ப்.அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.  

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை வரவேற்க  பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

சரியாக அவரது விமானம் 11.35 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது  மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்



குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி மற்றும் முக்கிய அதிகாரிகளை பிரதமர் மோடி  அறிமுகம் செய்து வைத்தார். 

தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் 150 அடி தொலைவுக்கு சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்ல  இருபுறமும்  இசையுடன் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்