ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள்: பாஜக மீது ம.பி முதல்வர் கமல்நாத் பாய்ச்சல்

மாஃபியாக்கள் ஆதரவுடன் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-10 05:18 GMT
போபால்,

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக கமல்நாத் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிர்ஆதித்யா சிந்தியா, கமல்நாத் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளார். 

தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 17 பேருடன் கர்நாடகாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஜோதிர்ஆதித்யாசிந்தியாவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை. ஜோதிர்ஆதித்யாசிந்தியா பாஜகவில் சேரலாம் என்றும் தகவல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. 

இந்த விஷயங்களால் மராட்டிய அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில், மாஃபியாக்களுடன் ஆதரவுடன் ஆட்சியை கவிழ்க்கச் சதி நடப்பதாக முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, மாஃபியாக்கள் உதவியுடன் ம.பி. காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது.  ஆனால், பாஜகவின் இந்த முயற்சியை முறியடிப்போம், இதில் அவர்கள் வெற்றி பெற முடியாது”என்றார். 

மேலும் செய்திகள்