கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அண்டை நாடுகளுடனான இந்திய நில எல்லை சீல் வைப்பு - மத்திய அரசு அவசர நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை இன்று நள்ளிரவு முதல் மூடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-03-15 07:41 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை இன்று நள்ளிரவு முதல் மூடப்படும் என்று  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு செல்லும் சாலை வழிகள், நேற்று மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எல்லை பகுதியில் அமைந்துள்ள அசாம், பீகார், மேகாலயா, மிசோரம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

மேலும் செய்திகள்