தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2020-03-16 04:59 GMT
புதுடெல்லி,

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள  யெஸ் வங்கியின்   நிறுவனர் ராணா கபூர் மீதான  பண முறைகேடு  வழக்கு தொடர்பாக, தொழில் அதிபர் அனில் அம்பானிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யெஸ் வங்கியில் கடன் பெற்ற மிகப்பெரிய நிறுவனங்களில் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனமும் அடங்கும். 

உடல் நலப் பிரச்சினைகளால் இன்று ஆஜராவதில் இருந்து அனில் அம்பானி விலக்கு கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அனில் அம்பானி ஆஜராவதற்கு புதிய தேதியை அமலாக்கத்துறை வெளியிடும் என்று தெரிகிறது.  யெஸ் வங்கியில் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்ற 12,800 கோடி ரூபாய் வராக்கடன்கள் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்