மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்

மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 காங். எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்.

Update: 2020-03-21 18:30 GMT
புதுடெல்லி,

மத்தியபிரதேசத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று ராஜினாமா செய்ததால், முதல்–மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் கமல்நாத் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், பதவி விலகிய 22 எம்.எல்.ஏ.க்களும் நேற்று ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன் சென்று பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, அந்த கட்சியில் சேர்ந்தனர்.

22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போது, அவர்களையே அந்த தொகுதிகளில் பாரதீய ஜனதா வேட்பாளராக நிறுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்