கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 22,025 ஆக உயர்வு

கொரோனாவால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 25 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-03-26 11:57 GMT
புதுடெல்லி,

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை 4 லட்சத்து 87 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 577 பேர் குணமடைந்துள்ளனர்.  கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700ஐ கடந்து உள்ளது.  இதனால் உலகம் முழுவதும் 22 ஆயிரத்து 25 பேர் பலியாகி உள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 47 ஆயிரத்து 461 பேரில் 17,709 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.  இது மொத்த எண்ணிக்கையில் 5 சதவீதம் ஆகும்.  3 லட்சத்து 29 ஆயிரத்து 752 பேருக்கு லேசான அளவிலேயே பாதிப்பு காணப்படுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

இவற்றில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் 67 புதிய பாதிப்புகளுடன் 81,285 பாதிப்புகளும், 3,287 உயிரிழப்புகளும் உள்ளன.  இந்த பட்டியலில் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது.  அந்நாட்டில் 7,503 பேர் பலியாகி உள்ளனர்.  இதனை தொடர்ந்து ஸ்பெயின் (2வது இடம்) மற்றும் ஈரான் (4வது இடம்) நாடுகள் உள்ளன.  இந்த பட்டியலில் சீனா 3வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்