வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிப்பு

வாட்ஸ்அப்பில் தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Update: 2020-04-07 07:37 GMT

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வதந்திகளும், பொய்செய்திகளும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், கொரோனா தொடர்பான வதந்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில், தகவல்களை பகிர  புதிய கட்டுப்பாடுகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, அதிகம் பரப்பப்படும் தகவல்களை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்.  இதற்கு முன்பு, ஒரு தகவலை அதிகபட்சமாக 5 பேர் வரை அனுப்பும் வசதி இடம் பெற்றிருந்தது. 

சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்செய்திகளை கட்டுப்படுத்த உலக நாடுகள், பல்வேறு முன்முயற்சிகளை தொடங்கியுள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. 

மேலும் செய்திகள்