மராட்டியம், குஜராத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

மராட்டியம், குஜராத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுதுள்ளது.

Update: 2020-06-02 16:36 GMT
புதுடெல்லி,

அரபிக்கடலில் நிசர்கா புயல் வலுவடைந்து வருவதையொட்டி, அது தாக்கும் போது ஏற்படும் பாதிப்பின் தேவைக்கு ஏற்ப, மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அரபிக்கடலில் நிசார்கா புயல் வலுவடைந்து வரும் நிலையில், அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் சமயத்தில் தேவை ஏற்படும் இடங்களில், மனித நேய உதவிகள், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இந்தக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும்.

இந்தநிலையில், அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மராட்டியம் குஜராத்திற்கு 'ரெட் அலர்ட்'  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலால் மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நிசர்கா புயலையொட்டி பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக 2 நாட்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்