இரு நாட்டு மோதலுக்கு மத்தியில் பிரதமர் மோடியை சீனா புகழ்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

இருநாட்டு மோதலுக்கு மத்தியில் பிரதமர் மோடியை சீனா புகழ்வது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-06-22 19:22 GMT

புதுடெல்லி, 

லடாக் மோதல் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்தவகையில் பிரதமர் மோடியின் உரையை சீனா புகழ்ந்திருப்பதாக கூறி நேற்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்த அவர், ‘சீனா நமது வீரர்களை கொன்றிருக்கிறது. நமது நிலத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது. அதன் பிறகும் இந்த மோதல் நேரத்தில் பிரதமர் மோடியை சீனா புகழ்வது ஏன்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கிடையே இந்தியா-சீனா மோதல் தொடர்பான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்திருப்பதை காங்கிரஸ் கட்சி சாடி இருக்கிறது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டில் பா.ஜனதா சமரசம் செய்யக்கூடாது எனவும், இது நமது ஆயுதப்படைகளுக்கு மிகப்பெரிய அவமதிப்பாக இருக்கும் எனவும் கூறியுள்ளது. மன்மோகன் சிங்குக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்த விவகாரத்தை ராகுல் காந்தியும் குறைகூறியுள்ளார்.

மேலும் செய்திகள்