கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2020-06-27 03:45 GMT
புதுடெல்லி: 

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கபட்டது.

இந்த அவசர சட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. 


மேலும் செய்திகள்