ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.

Update: 2020-07-07 03:01 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில்  கூசு என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,  மத்திய ரிசர்வ் படை , ராணுவத்தின் ராஷ்டிரிய ரைபில்ஸ் பிரிவு மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஆகியோர் அடங்கிய கூட்டு பாதுகாப்பு படை குறிப்பிட்ட  இடத்திற்கு விரைந்தது. அதிகாலை 5.30 மணியளவில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.  பயங்கரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டான். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்