ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி: வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதி

கோவிந்த கோடி நாமம் தினமும் காலையிலும், மாலையிலும் பக்தியுடன் எழுதினேன் என்று மாணவி குமாரி கீர்த்தன் கூறியுள்ளார்.

Update: 2024-05-01 05:27 GMT

திருமலை,

மாணவர்கள், குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ஆன்மிகத்தை வளர்க்க 'கோவிந்த கோடி' என்ற திட்டத்தை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதுபவர்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த மாணவி குமாரி கீர்த்தன் ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதியுள்ளார். அவர் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

இது குறித்து மாணவி குமாரி கீர்த்தனா கூறுகையில், வெங்கடேஸ்வர சுவாமியின் அருளால் கோவிந்த கோடி எழுதும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கோவிந்த கோடியை 2023 நவராத்திரியிலிருந்து எழுதத் தொடங்கினேன். தினமும் காலையிலும், மாலையிலும் பக்தியுடன் எழுதினேன். சிறுவயதில் இருந்தே வெங்கடேஸ்வர ஸ்வாமி மீது வைத்திருந்த அசைக்க முடியாத பக்தி, அருளால்தான் குறுகிய காலத்தில் கோவிந்த கோடி எழுத முடிந்தது என்றார். கோவில் துணை செயல் அலுவலர் லோகநாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்