மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மை: ராகுல் காந்தி எச்சரிக்கை

மத்திய அரசின் தவறான பொருளாதார மேலாண்மையால் கடும் பாதிப்பு ஏற்பட போவதாக ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-07-08 06:02 GMT
புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார மேலாண்மை விவகாரத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார். இது ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தியாவின் மோசமான பொருளாதார மேலாண்மை பேரழிவாகவும் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை இல்லாத நிலையையும் உருவாக்கப் போகிறது.   இது இனி அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்திய குடும்பங்களின் வருமானம் பற்றிய தரவுகள் அடங்கிய  ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் ராகுல் காந்தி தனது பதிவோடு இணைத்து வெளியிட்டுள்ளார்.  அதில்,   கொரோனா ஊரடங்கால் 10-ல் 8 இந்திய குடும்பங்கள் தங்களது  வருமானத்தை இழந்துள்ளனர். நகர்புறங்களை விட கிராமப்புற குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக  கடுமையான  வறுமை நிலை பின்னோக்கிய   நிலையில் செல்வதை பார்க்க முடிகிறது” ஆகிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்