ஊரடங்கால் கடன் தொல்லை : மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-07-15 07:40 GMT

மும்பை

மராட்டிய மாநிலம் சோலாப்பூரை  சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார்.

மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது.இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது உறவினர்களுக்கு போன் செய்து கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்த போது மேலும் அதிர்ச்சியடைந்தனர்.காரணம் அமோலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த 

போலீசார் இது குறித்து விசாரணை நடத்திய போது கடன் தொல்லை காரணமாக இம்முடிவை அமோல் எடுத்தது தெரியவந்தது.அழகான மற்றும் அன்பான குடும்பமாக இருந்த நால்வர் உயிரிழந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்