கொரோனா பாதிப்பை கண்டறியும் மலிவு விலை கருவி இந்தியாவில் அறிமுகம்

கொரோனா பாதிப்பை கண்டறியும் மலிவு விலை கருவியை டெல்லி ஐஐடி கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி வர்த்தக ரீதியாக இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

Update: 2020-07-15 16:50 GMT
புதுடெல்லி,

கொரோனா பாதிப்பைக் கண்டறியும் மலிவு விலை பரிசோதனைக் கருவியை தயாரிக்கும் முயற்சியில் ஐஐடி டெல்லி ஈடுபட்டது. இது வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் வர்த்தக ரீதியாக அறிமுகம்   செய்யப்பட்டது.  இதன் அடிப்படை விலை ரூ.399 ஆக இருக்கும் என்று ஐஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்.என்.ஏ ஐசோலேஷன் மற்றும் ஆய்வக கட்டணங்களையும் சேர்த்து இதன் விலை ரூ.650 ஆக இருக்கும் எனவும் இதுவுமே தற்போது கிடைக்கும் பரிசோதனை கருவிகளிலேயே மிகவும் குறைந்த விலைதான் என்று ஐஐடி தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனை கருவிக்கு  ‘கோரோசூர்’(Corosure) என்று பெயரிட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம், கொரோனா தொற்று முடிவுகளை மூன்று மணி நேரத்தில் துல்லியமாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்