ராஜஸ்தான்: காங்கிரஸ் அரசுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என அசோக் கெலாட் தகவல்

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-18 14:12 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் பிளவு ஏற்பட்டது. தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் தனியே முகாமிட்டுள்ளார். சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவும் அசோக் கெலாட் அரசு முயற்சித்து வருகிறது. இதனால், ராஜஸ்தான் மாநில அரசியலில்  உச்ச கட்ட குழப்பம் நிலவுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவினை திரும்ப பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஆதரவளித்துள்ளதாக முதல் மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அசோக் கெலாட்  கூறுகையில், "பாரதிய பழங்குடியினர் கட்சியின் (பி.டி.பி) இரு எம்.எல்.ஏக்களும்  மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்