இந்தியா-மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகே பதுங்கியிருந்து பதுங்கி இருந்த அசாம் ரைபிள்ஸ் 3 வீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர்.

Update: 2020-07-30 07:58 GMT
இம்பால்:

மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் மியான்மர் எல்லையை ஒட்டிய  சாஜிக் தம்பிக் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் வீரர்களின் வாகனம் சிக்கியது. 

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள லீமகாங்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். உள்ளூர் பயங்கரவாத குழுவான மக்கள் விடுதலை முன்னணி இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்