ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சரக்குகளை கையாளும் கிரேன் கீழே விழுந்ததில் 10 பேர் பலி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சரக்குகளை கையாளும் கிரேன் கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர்.

Update: 2020-08-01 08:51 GMT
விசாகபட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கு சரக்குகளை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் திடீரென சரிந்து கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர். மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்