அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை

அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

Update: 2020-08-05 10:37 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் 2001 முதல் 2018ம் ஆண்டில் 1,727 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இவற்றில் பல வழக்குகளின் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. 

இந்நிலையில் அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் காவல் நிலைய மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்