கருணாநிதி அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்த தலைவர் - மம்தா பானர்ஜி புகழாரம்

கருணாநிதி அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்த தலைவர் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2020-08-07 21:25 GMT
சென்னை, 

கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளில் அவரை நான் நினைவு கூறுகிறேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி. மேலும் அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்த தலைவரும் ஆவார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்