சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கூடாது எடியூரப்பாவுக்கு, காங்கிரஸ் பிரமுகர் கடிதம்

நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கூடாது என்று எடியூரப்பாவுக்கு, காங்கிரஸ் பிரமுகர் கடிதம் எழுதி உள்ளார்.;

Update:2020-08-17 09:53 IST
பெங்களூரு,

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவரை முன்கூட்டியே விடுவிக்க கூடாது என்று வலியுறுத்தி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சொத்துகுவிப்பு வழக்கில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக சிறைத்துறை முள்னாள் டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இந்த சிறப்பு சலுகைகளை பெற, பணம் கைமாறியதாக குறித்து அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. அந்த குழு இன்னும் விசாரணை அறிக்கையை வழங்காத நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்