சூரத் டாக்டரின் வித்தியாசமான கலை முயற்சி: உலர் பழங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையார்!
சூரத் நகரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் உலர் பழங்கள், தானியங்களைப் பயன்படுத்தி அழகிய பிள்ளையார் உருவத்தைச் செய்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.;
சூரத்,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் பெருமளவில் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநில கோவில்களில் பக்தர்கள் இன்றி தீப ஆராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பிள்ளையார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சூரத் டாக்டரின் வித்தியாசமான முறையில் உருவாக்கிய சாப்பிடும் பிள்ளையார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத இந்தப் பிள்ளையார் சிலை 20 அங்குலம் உயரம் உடையது. டாக்டர் அதிதி மிட்டல், அந்த உலர் பழங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை மருத்துவமனையில் வைத்திருக்கிறார். இந்த பிள்ளையாரில் உள்ள உலர் பழங்களும் தானியங்களும் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, பைன் விதைகள் உள்ளிட்ட உலர்ந்த பழங்களுடன் காட்சியளிக்கும் இந்தப் பிள்ளையாரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.