மோசமான வானிலை: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து

காஷ்மீரின் உயரமான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.;

Update:2025-12-21 15:20 IST

ஸ்ரீநகர்,

காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல்பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் கூறுகையில், "மோசமான வானிலை காரணமாக இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காஷ்மீரின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் சமவெளிப் பகுதிகளில் பெய்த மிதமான மழை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், ஜம்மு மற்றும் டெல்லி விமான நிலையங்களில் நிலவிய வானிலை காரணமாக ஸ்ரீநகர் செல்லவிருந்த இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வானிலை சீரடைவதைப் பொறுத்தது விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்