மாமாவை கொன்ற நபரை 18 ஆண்டுகளுக்குப்பின் சுட்டுக்கொன்ற சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்
இம்ரான் 2017ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.;
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் சராய் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (வயது 49). பால் வியாபாரியான இவர் கடந்த 2007ம் ஆண்டு இளைஞரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் இருந்த இம்ரான் 2017ம் ஆண்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, இம்ரான் சராய் பஸ்தி பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், இம்ரானை நேற்று சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளான். சைக்கிள் கடையில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இம்ரானை பைக்கில் வந்த சிறுவன் சுட்டுக்கொன்றான். இதையடுத்து, சிறுவன் போலீசில் சரணடைந்தான். தனது மாமாவை 2007ம் ஆண்டு இம்ரான் கொன்றதால் 18 ஆண்டுகளுக்குப்பின் அவரை சுட்டுக்கொன்றதாக சிறுவன் போலீசில் தெரிவித்துள்ளான்.