விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடும் முடிவுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்தது.;

Update:2020-08-24 16:33 IST
திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த முடிவுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட கூடாது என வலியுறுத்தி நேற்று கேரளா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் போராட்டம் நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து இன்று கேரள விமானநிலையங்களை, குத்தகைக்கு விடும் மத்திய அரசின் தீர்மானத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் கேரள முதல்வரால் முன் வைக்கப்பட்ட தீர்மானம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்